கன்னியாகுமரி | கடையாலு மூடு பிலாங்காவிளை பகுதியை சேர்ந்தவர் விஜயன் - சரோஜா தம்பதியர்கள். கூலி வேலை செய்து வரும் இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். இந்நிலையில் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு திடீரென வந்த தம்பதியினர், தரையில் படுத்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தனது மகன் அரசு வேலை கிடைத்து வெளியூர் சென்றதால் தன் குடியிருக்கும் பகுதியில் உள்ளவர்கள் ஏற்கனவே பொறாமை பிடித்துள்ளனர். மகள் பொறியியல் பட்டம் பெற்று தனியார் அமைப்பில் ஐஏஎஸ் பயிற்சி பெற்று வருகிறார்.
ஆனால் அப்பகுதியில் பொறாமை ஏற்பட்டு நாங்கள் வசிக்கும் வீடும் நிலமும் அவர்களுக்கு சொந்தம் என கூறி கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு மகனை பார்க்க நான் சென்று விட்டு திங்கட்கிழமை காலை வந்தபோது வீட்டை சுத்தி அவர்கள் வேலி அமைத்து வீட்டில் இருந்த பல லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் மற்றும் கல்வி சார்ந்த அனைத்தையும் அபகரித்து எடுத்து சென்று விட்டதாக சரோஜா கலியல் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
மேலும் படிக்க | போராட்டக்காரர்களுக்கும், காவல் துறைக்கும் இடையே தள்ளுமுள்ளு...
ஆனால் போலீஸ் தரப்பில் இதுவரை எந்த வித நடவடிக்கை எடுக்காததால் மனம் உடைந்த தான் மற்றும் கணவன் தங்கள் பிரச்சனைகளை பதாகையில் எழுதி நாகர்கோவிலில் ஆட்சியர் அலுவலகத்தில் வந்து உட்கார்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவித்தார்,இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தொடர்ந்து சம்பந்தப்பட்ட கும்பலிடம் இருந்து கொலை மிரட்டல் வருவதாக தெரிவித்துள்ளனர் சம்பந்தப்பட்ட கும்பல் பிரின்ஸ்,பிரவீன், வில்லியம்,சோபா,ஷைனி மேலும் கண்டால் தெரியும் ஐந்து பேர்கள் மீது சரோஜா புகார் அளித்துள்ளார்.