ஆட்டோவை மீட்க சென்றவர் குழந்தைகளை கடத்திய மர்ம கும்பல்...

ஆட்டோவை மீட்க சென்றவர் குழந்தைகளை கடத்திய மர்ம கும்பல்...

டியூ காட்டாத வாகனத்தை திரும்பி பெற சென்ற குடும்பத்தைத் தாக்கி, குழந்தையைக் கடத்தி செல்ல முயற்சி செய்தவர்களை பொது மக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்
Published on

கன்னியாகுமரி | திண்டுக்கல்லைச் சேர்ந்த அழகர்சாமி மற்றும் அவர் மனைவி கார்த்திகா தேவிக்கு ஒரு குழந்தை உள்ளது. மார்த்தாண்டத்தில் வீடு எடுத்து தங்கி உள்ள இவர்கள், லோடு ஆட்டோ ஒன்றை நிதி நிறுவனத்தில் இருந்து கடன் வாங்கி அதில், வெங்காயம் விற்பனை செய்து வருகின்றனர். 

இந்நிலையில் நேற்றிரவு நாகர்கோவில் அருகே ஆணைப்பாலம் என்ற இடத்தில் நேற்று வெங்காயம் விற்பனை செய்துவிட்டு அழகர்சாமி வீட்டிற்கு திரும்பும் போது, பைக்கில் வந்த மூன்று நபர்கள் அவரை வழிமறித்து அழகர்சாமியை ரூட்டில் போட்டு அடித்து தாக்கியதோடு, அவரது ஆட்டோவையும் பலவந்தமாக அவரிடம் இருந்து பிடுங்கி ஓட்டிச் சென்றுள்ளனர்.

ஆனால், அந்த ஆட்டோவில் அவர் மட்டுமல்ல, அவரது குழந்தையும், மனைவியும் இருந்த நிலையில், அவர்களோடு சேர்த்து ஆட்டோவைக் கடத்திச் சென்றுள்ளனர்.

கடந்த சில மாதங்களாக பணம் கட்டாததால், அந்த ஆட்டோவை மீண்டும் எடுத்துக் சென்றுள்ள நிலையில், பதறி போன அழகர்சாமி, அவர்களைத் துரத்திப் பிடித்து ஆட்டோவின் பின்புறத்தில் ஏறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து பாம்பன் விளை என்ற இடத்தில் மூன்று போரையும் சாலையிலேயே இறக்கி விட்டு அங்கிருந்து அந்த நபர் ஆட்டோவை மட்டும் எடுத்துச் சென்றுள்ளார். அப்போது, பொதுமக்கள் அவர்களை வழிமறித்ததில் ஒருவர் மட்டும் சிக்கி பொதுமக்களிடம் நல்ல அடி வாங்கினர். மேலும், பொது மக்கள் அவர்களில் ஒருவரை கையும் களவுமாக பிடித்து பொலிசிஸிடம் ஒப்படைத்துள்ளனர்.

காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டதன் பேரில் கோட்டார் போலீசார் லோடு ஆட்டோவை மீட்டு தப்பி சென்றவர்கள் யார் என்று குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் நேற்று நள்ளிரவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com