சாலை மறியலில் இறங்கிய ‘நல்ல பாம்பு’...

ஆம்புலன்ஸ்க்கு வழி விடாமல் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட நல்ல பாம்பு வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.
சாலை மறியலில் இறங்கிய ‘நல்ல பாம்பு’...
Published on
Updated on
1 min read

விழுப்புரம் | நல்ல பாம்பு படம் எடுப்பது பார்த்து பலரும் நடு நடுங்கி போன காலங்கள் போகி, தற்போது பாம்புகள் குறித்த வாட்சாப் செய்திகள் வரத்தொடங்கி விட்டது என்று சொன்னால் அதில் எந்த ஒரு மிகைமையும் இல்லை. அந்த வகையில், சமீபத்தில், நாய் குட்டிகளைக் காக்க படம் எடுத்த நல்ல பாம்பு, நல்ல பாம்பை பாட்டிலுக்குள் ஒளித்து வைத்த சிறுவன் போன்ற செய்திகள் எல்லாம் வந்து வைரலாகி வருகிறது.

இந்நிலையில், ஒரு நல்ல பாம்பு, ஒரு 108 ஆம்புலன்ஸை செல்ல விடாமல் “சாலை மறியல்” செய்த வீடியோ ஒன்று இணையத்தில் படு வைரலாகி வருகிறது.

விழுப்புரம் மாவட்டம் - செஞ்சி அடுத்த மேல்மலையனூர் பகுதியில் இருந்து நோயாளி ஒருவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் ஏற்றுக்கொண்டு ஆம்புலன்ஸ் ஓட்டுனர் திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்தார்.

அப்பொழுது அவலூர்பேட்டை என்ற இடத்தில் சாலை நடுவே படம் எடுத்துக்கொண்டு 108 ஆம்புலன்ஸ்க்கு வழி விடாமல் நல்ல பாம்பு ஒன்று சாலை மறியல் ஈடுபட்டவாரு நின்றது. இதனைக் கண்ட 108 ஆம்புலன்ஸ் ஓட்டுனர் அரை மணி நேரம் வாகனத்தை அங்கேயே நிறுத்தி பின்னர் பாம்பு சென்றவுடன் அவர் சென்றுவிட்டார்.

இந்த வீடியோ தற்பொழுது சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com