கருவறையை படம்பிடித்தால் நடவடிக்கை! - பழனி கோவில் நிர்வாகம் அதிரடி

பழனி முருகன் கோயில் கருவறையை புகைப்படம் எடுத்து, இணையத்தில் பதிவிடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
கருவறையை படம்பிடித்தால் நடவடிக்கை! - பழனி கோவில் நிர்வாகம் அதிரடி

முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனிக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகை தருகின்றனர்.

மலை மீது உள்ள தண்டாயுதபாணி சுவாமி கோவில் கருவறையில் உள்ள நவபாஷாண முருகன் சிலையை பக்தர்கள் மற்றும் செய்தியாளர்கள் படம் பிடிக்கவோ, வீடியோ எடுக்கவோ கோயில் நிர்வாகம் அனுமதிப்பதில்லை. அவ்வாறு பக்தர்கள் செல்போனில் படம் பிடிக்கும் நிலையில் பாதுகாவலர்கள் செல்போனை பறிமுதல் செய்கின்றனர்.

இருந்த போதும் பக்தர்கள் சிலர் கருவறையில் உள்ள முருகன் சிலையை வீடியோ எடுத்து இணையதளங்களில் பதிவேற்றம் செய்யும் நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

கருவறையை பட எடுத்து இணையத்தில் பதிவு செய்வது மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும், மூலவர் சிலையை  படம் எடுப்பதை தடுக்கும் வகையில் மூலவர் சன்னதிக்குச் பக்தர்கள் செல்போன் எடுத்து செல்ல தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை முருக பக்தர்களிடமிருந்து எழுந்துள்ளது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com