பழனி முருகன் கோயில் ஊழியர்கள் போராட்டம்...!!

பழனி முருகன் கோயில் ஊழியர்கள் போராட்டம்...!!

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் ஊழியர்கள் பணி புறக்கணிப்பு போராட்டத்தை ஈடுபட்டு வருவதால் கோவில் பணிகள் பாதிப்பு ஏற்பட்டுள்ளது

திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் 330 தூய்மை பணியாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இவர்கள் படிப்பாதை, மலைக்கோவில் மின் இழுவை ரயில் நிலையம், ரோப் கார் நிலையம், பஞ்சாமிர்தம் தயாரிப்பு நிலையம் மற்றும் கோயில் விடுதிகள் ஆகிய இடங்களில் தூய்மை பணியில் ஈடுபட்டு வருகின்றனர். Palani Murugan Temple

கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வரும் இவர்களுக்கு கடந்த 6 ஆண்டுகளாக ஊதிய உயர்வு வழங்கபடவில்லை. இது தொடர்பாக பல்வேறு முறை ஊழியர்கள் மனு கொடுத்தும் இதுவரை கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்காததால் இன்று அதிகாலை 5 மணி முதல் வேலைக்கு  செல்லாமல் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இன்று உண்டியல் காணிக்கைகள் என்னும் பணிகள் நடைபெற உள்ளதால் பெரும்பாலும் தூய்மை பணியாளர்களே  உண்டியல் பெட்டிகளை தூக்கிச் செல்வது, நாணயங்களை பிரித்து தருவது உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு வரும் நிலையில் தூய்மை பணியாளர்கள் பணிகளுக்கு செல்லாததால் திருக்கோவில் பணிகள் முடங்கும் நிலை ஏற்பட்டது.

பின்னர் கோவில் அதிகாரிகள்  மே 1 ஆம் தேதி ஊதிய உயர்வு தருவதாக உறுதி அளித்ததை எடுத்து ஊழியர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.