பாலாறு-பொருந்தலாறு அணை..! விவசாய தேவைக்காக 120 நாட்களுக்கு தண்ணீர் திறப்பு..!

பாலாறு-பொருந்தலாறு அணை..! விவசாய தேவைக்காக 120 நாட்களுக்கு தண்ணீர் திறப்பு..!

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் தொடர் மழை காரணமாக பாலாறு - பொருந்தலாறு அணையில் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. 65 அடி உயரம் கொண்ட பாலாறு - பொருந்தலாறு அணை முழு கொள்ளளவை எட்டியதை அடுத்து விவசாய தேவைக்காக தண்ணீர் திறந்து விடக் கோரி தமிழக முதல்வருக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று பாலாறு - பொருந்தலாறு அணையிலிருந்து  பழைய அணைக்கட்டு கால்வாய் மூலம் புன்செய் பாசனத்திற்காக இன்று முதல் 120 நாட்களுக்கு தண்ணீர் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

தற்போது வினாடிக்கு 1220 கன அடி தண்ணீர் பழைய அணைக்கட்டு  கால்வாய் வழியாக  செல்கிறது. அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரைப் பயன்படுத்தி பழனியில் உள்ள பெரியஅம்மாபட்டி, தாமரைகுளம், நெய்க்காரப்பட்டி, மானூர், கோரிகடவு உள்ளிட்ட 16 கிராமங்களிலுள்ள 6168 ஏக்கர் பாசன நிலங்கள் பயன் பெற உள்ளது. விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று உடனடியாக தண்ணீர் திறக்க உத்தரவிட்ட தமிழக முதலமைச்சருக்கு விவசாயிகள் நன்றி தெரிவித்துள்ளனர். 

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com