பக்தர்களுக்கு அருள்பாலித்த பஞ்சமூர்த்திகள்...!!

பக்தர்களுக்கு அருள்பாலித்த பஞ்சமூர்த்திகள்...!!

காரைக்காலில் அமைந்துள்ள புகழ்பெற்ற கைலாசநாத சுவாமி தேவஸ்தான பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான பஞ்சமூர்த்திகள் சகோபுர வீதியுலா நடைபெற்றுள்ளது.

புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் அமைந்துள்ள புகழ்பெற்ற அருள்மிகு  ஸ்ரீ கயிலாசநாத சுவாமி ஆலயத்தின் பங்குனி உத்திர பிரம்மோற்சவப் பெருவிழா கடந்த 26-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.  விழாவின் முக்கிய நிகழ்வான பஞ்ச மூர்த்திகள் சகோபுர வீதியுலா விமரிசையாக நடைபெற்றது.  இதில் வெள்ளி ரிஷப வாகனத்தில் ஸ்ரீகயிலாசநாதரும், ஸ்ரீசுந்தராம்பாள் தாயார், விநாயகர்,சுப்ரமணியர், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்திகளும் வண்ண வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com