பனிமய மாதா  440-ஆவது ஆண்டு திருருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது!

பனிமய மாதா  440-ஆவது ஆண்டு திருருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது!

உலகப் பிரசித்தி பெற்ற பனிமய மாதா 440 ஆவது ஆண்டு திருவிழா பக்தர்களுடன் தொடக்கம் - மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் ஆண்டகை ஆலய கொடியை ஏற்றி வைத்தார். கடந்த இரண்டுகள் ஆண்டு, கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக பக்தர்கள் பங்கேற்பின்றி திருவிழா நடைபெற்றது.

இந்த ஆண்டு பக்தர்கள் அனுமதிக்கபட்டு பனிமய மாதா ஆலய திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. தூத்துக்குடி பனிமயமாதா ஆலய திருவிழாவில், உள்ளூர் மக்கள் மட்டுமல்லாமல் தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்தும், பல மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் மாதாவை தரிசிக்க தூத்துக்குடிக்கு பக்தர்கள் வருவார்கள்.

காலை, கூட்டுத்திருப்பலிக்குப் பிறகு ஆலயத்தின் முன்உள்ள கொடிக்கம்பத்தில் மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் ஆண்டகை தலைமையில் பங்கு தந்தை குமார் ராஜா மற்றும் முக்கிய பங்கு நிர்வாகிகள் முன்னிலையில் பனிமய அன்னை திருவிழா  கொடியேற்றப்பட்டது. அப்போது விண்ணுயர பனிமய அன்னை வேண்டி குரல் எழுப்பியும், சமாதான புறாக்களை பறக்கவிட்டும் விழா தொடங்கப்பட்டது.

இந்தத் திருவிழா நாட்களில் உலக நன்மை, உலக சமாதானம், மாணவ மாணவிகள் கல்விமேன்மை, வியாபாரிகள், மீனவர்கள், பனைத்தொழிலாளர்கள், உப்பளத் தொழிலாளர்கள் என அனைத்துத் தரப்பினருக்குமான விசேஷ திருப்பலிகள் மற்றும்  நற்கருணை பவனி நடைபெறும். திருவிழாவின் 10-ம் நாள் விழாவில் நகர வீதிகளில் பனிமய அன்னையின் திருவுருவ தேர்ப்பவனி நடைபெறும். இங்கு கிறிஸ்துவர்களுக்கு அடுத்தபடியாக இந்துக்களும், முஸ்லீம் மக்களும் பிராத்தனைக் கூட்டங்களில் கலந்துகொண்டு, தங்கள் பிராத்தனை நிறைவேற மெழுகுவத்தி ஏந்திஅன்னையை வழிபடுவது  கூடுதல் சிறப்பாகும். இந்நிகழ்ச்சிகள் உள்ளூர் தொலைக்காட்சிகள், சமூக வலைதளங்களில் நேரலை ஒளிபரப்பு செய்யப்பட்டது.

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தலைமையில் ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கொடியேற்றத்திற்கு வந்த பக்தர்களில் ஒருவரான ரோஸ்லின் கூறுகையில், தூத்துக்குடி பணிமய மாதா 440 ஆவது திருவிழா கொடியேற்றம் வெகு விமர்சியாக நடைபெற்றது. கடந்த இரண்டு ஆண்டு கொரோனா கட்டுப்பாடுகளால் மக்கள் அனுமதிக்கப்படவில்லை. ஆனால் இன்று பேரலாயத்தில், மக்கள் பக்தியோடு ஏராளமான மக்கள் வந்துள்ளனர்.மேலும், நாட்டு படகு மீனவர்கள், விசைப் படகு மீனவர்கள் தங்களின் நேர்த்திக் கடனை செலுத்தும் வண்ணம் பழம், பால், லட்டு கொடுத்து வருகின்றனர். வருடம் தோறும் மக்கள் கூட்டம் அதிகமாக கூடிக்கொண்டே உள்ளதாகவும் மாதாவின் ஆசி அனைத்து மக்களுக்கும் கிடைக்கும் எனவும் கூறினார்.

ஆயர் ஸ்டீபன் அண்டனி கூறுகையில், இன்றைய நாள் மிகவும் மகிழ்ச்சியான நாள், கொடியேறும் போது மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து மரியே வாழ்க, மரியே வாழ்க என கோஷமிட்டனர். தூத்துக்குடி நகரமே இங்கே தான் உள்ளது. நேற்றைய தினம் நல்ல மழை பெய்தது. மாதாவின் ஆசி அனைவருக்கும் இருப்பதாக கூறிய அவர், கோவில் நிர்வாகிகள் நல்ல முறையில் திட்டம் தீட்டி அதிக பொறுப்புடன் மக்கள் அனைவரும் கொடியேற்றத்தை கண்டு களிக்க ஏற்பாடு செய்தனர். இதற்காக அனைவருக்கும் பாராட்டுகள், நோய், வறுமை நீங்கி மகிழ்ச்சி அனைத்து மக்களும் மகிழ்ச்சியாக இருக்க பணிமய அன்னை துணை இருப்பதாக கூறினார்.

அருகில், சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன், மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ்,   ஆகியோர் உடனிருந்தனர்.