சுங்க கட்டண உயர்வு கண்டித்து சிஐடியு ஆர்ப்பாட்டம்...

சுங்க கட்டண உயர்வை கண்டித்து சிஐடியு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சுங்க கட்டண உயர்வு கண்டித்து சிஐடியு ஆர்ப்பாட்டம்...

ராமநாதபுரம் | இன்று நள்ளிரவு முதல் உயர்த்தப்பட்டுள்ள சுங்க கட்டண உயர்வை கண்டித்து சிஐடியு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்தியாவில் இன்று நள்ளிரவு முதல் சுங்க சாவடிகளின் கட்டணம் 10 முதல் 30 சதவீதம் வரை உயர்த்தி ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது.

இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். சுங்க கட்டண உயர்வை ரத்து செய்யக் கோரி ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே போகலூர் சுங்கச்சாவடியில் சிஐடியு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சிஐடியு மாவட்ட செயலாளர் சிவாஜி தலைமையில் சுமார் 30க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ஒன்றிய அரசுக்கு எதிராக கோஷமிட்டனர். கட்டண உயர்வு காரணமாக பொதுமக்கள் வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.

எனவே ஒன்றிய அரசு உயர்த்தப்பட்ட கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டுமென ஒன்றிய அரசுக்கு எதிராக கோசமிட்டு எதிர்ப்புகளை பதிவு செய்தனர்.

மேலும் படிக்க | ரூ.3.75 கோடி மதிப்பிலான பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு...