தமிழகத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள பெரும்பாலான ஏரிகள் நிரம்பி தாழ்வான குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது. இந்நிலையில் ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சிக்குட்பட்ட சிவன்தாங்கல் கிராமத்தில் உள்ள தாங்கல் பகுதியில் குடிசை வீடுகள் அமைத்து 21 இருளர் இன மக்கள் வசித்து வருகின்றனர்.
மேலும் படிக்க | அரசு தலைமை மருத்துவமனையில் தேங்கிய மழைநீர்...
இவர்கள் குடியிருப்பு முழுவதும் மழை நீர் சூழ்ந்துள்ளதால் ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி மற்றும் வருவாய் துறை மூலம் அதே பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் முகாம் அமைத்து தற்போது 10 குடும்பங்களை சேர்ந்த கைக்குழந்தைகள் உட்பட 35 பேர் தங்க வைத்து அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்து வருகின்றனர்.
ஒரு சிலர் ஆபத்தான நிலையில் உள்ள குடிசை வீட்டிலேயே குடியிருந்து கொண்டு முகாமுக்கு வர மறுத்து வருகின்றனர். இவர்களுக்கு தமிழக அரசு மூலம் காட்ரம்பாக்கம் பகுதியில் இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | நெய்தல் ஆற்றில் சிறுபாலம் உடையும் அளவு கரைபுரண்டோடிய வெள்ளம்...