தீபாவளியை உற்சாகமாக கொண்டாடி வரும் புதுச்சேரி மக்கள்!

சிறுவர் முதல் பெரியவர் வரையிலான குடும்பத்தினர் அனைவரும் புத்தாடை அணிந்து, தீபாவளிக்கான சிறப்பு பூஜையை அவரவர் வீடுகளில் செய்து வழிபட்டனர்.

தீபாவளியை உற்சாகமாக கொண்டாடி வரும் புதுச்சேரி மக்கள்!

தமிழர்களின் புதுச்சேரி மாநிலத்தில் வழக்கமான உற்சாகத்துடன் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டு வருகின்றது.

தீபாவளி தீப ஒளி என்பது தான் இதற்கு அர்த்தம். தீபங்களை ஏற்றி அதில் வரும் ஒளியின் மூலமாக இருள் விலகும். அதுபோல நம் மனதிலுள்ள தீமை என்னும் இருள் நீங்கி நன்மை என்னும் பிரகாச ஒளிபெற தீபாவளியை கொண்டாடுகிறோம்.

அந்த வகையில் புதுச்சேரி மாநிலத்தில் வழக்கமான உற்சாகத்துடன் பொதுமக்கள் தீபாவளி பண்டிகையை கொண்டாடி வருகின்றார்கள். சிறுவர் முதல் பெரியவர் வரையிலான குடும்பத்தினர் அனைவரும் புத்தாடை அணிந்து, தீபாவளிக்கான சிறப்பு பூஜையை அவரவர் வீடுகளில் செய்து வழிபட்டனர். ஒருவருக்கொருவர் இனிப்புகள் வழஙகி பட்டாசு வெடித்தும் மத்தாப்பு பூத்திரிகள் கொளுத்தியும் இந்த பண்டிகையை வெகு உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர்.

தீபாவளி பண்டிகையை கொண்டாடும் புதுச்சேரி தமிழ் மக்களுக்கு முதலமைச்சர் என்.ரங்கசாமி உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்கள்.