தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சுற்றுலாத்துறை சார்பில் தீவுத்திடலில் பட்டாசு கடை அமைக்க அனுமதி வழங்கப்பட்டது. அடுத்து பட்டாசு விற்பனை உரிமையாளர்கள் சங்கம் சார்பில் 44 பட்டாசு கடைகள் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த திங்கட்கிழமை அன்று பட்டாசு விற்பனை கடைகளை அமைச்சர் சேகர்பாபு மற்றும் மதிவேந்தன் ஆகியோர் திறந்து வைத்தனர்.
இந்நிலையில் தீபாவளி பண்டிகைக்கு இன்னும் இரண்டு நாட்கள் உள்ள நிலையில் தீவுத்தொடரில் அமைக்கப்பட்டுள்ள பட்டாசு கடைகளில் பட்டாசுகளை வாங்குவதற்காக பொதுமக்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் வியாபாரிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தீபாவளிக்காக பட்டாசுகள் வாங்க இங்கே வந்துள்ளோம் அனைத்து விதமான பட்டாசுகளும் விற்பனை செய்யப்படுகிறது முக்கியமாக குழந்தைகளுக்கான பட்டாசுகள் விற்பனை செய்யப்படுகிறது விலையும் பொதுமக்கள் வாங்கக்கூடிய அளவில் உள்ளது என வாடிக்கையாளர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய ஆனந்தராஜன், “இந்த வருடம் தீபாவளிக்காக 100% பசுமை பட்டாசுகள் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது விலை குறைவாக இருக்கிறது என்பதால் பொதுமக்களும் பட்டாசுகளை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.
பட்டாசுகளை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகையும் அளித்து வருகிறோம். ஆனாலும் தமிழக அரசுக்கு பட்டாசு வெடிக்கும் நேர கட்டுப்பாட்டை விளக்கி உத்தரிட வேண்டும் என்பது விற்பனையாளர்களின் கோரிக்கையாக வைக்கிறோம்” எனக் கூறினார்.