மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆவணங்களை தீயிட்டுக் கொழுத்த முயற்சி!

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆவணங்களை தீயிட்டுக் கொழுத்த முயற்சி!

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இளைஞர் ஒருவர் ஆதார் குடும்ப அட்டை வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றை தீயீட்டு எரிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

புகார் மீது நடவடிக்கை இல்லை

தூத்துக்குடி லெவஞ்சிபுரம் 1ஆவது தெருவை சேர்ந்தவர் சுந்தர் தனது கையில் வைத்திருந்த மனுவில் கூறப்பட்டிருந்ததாவது, ராஜகோபால் நகர் 1 ஆவது தெருவில் இடம் வாங்கி வீடு வாங்கி உள்ளார். ஆனால் பால் காய்ச்சலுக்கு முன் வீட்டை விலைக்கு கொடுத்தவர் வாங்கிய வீட்டிற்கு பத்திரம் முடித்து தராமல் சென்று விட்டனர்.  இது குறித்து மாவட்ட கண்காணிப்பாளரிடம் புகார் கொடுத்து எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியதால் மில்லர்புரத்தில் உள்ள டவர் ஏறி உயிர்விடும் அளவுக்கு மன உளைச்சலுக்கு ஆளாகி விட்டேன். காவல்துறையினர் என்னை கண்டித்து அனுப்பினார்கள்.

மேலும் படிக்க : "பத்திரிகையாளர்களை இழிவுபடுத்தி பேசுவது தரம் தாழ்ந்த செயல்" அண்ணாமலைக்கு பதிலடி கொடுத்த கனிமொழி!

ஆவணங்களை எரிக்க முயற்சி

ஆனால் கட்டியுள்ள வீட்டிற்கு  2 லட்சம் தரும்படி கேட்கின்றனர். எனக்கு வேலை எதுவும் இல்லாத நிலையில் எனக்கு கூடுதலாக பணம் கொடுக்க முடியாது. இந்த நிலையில் அவர்கள் என்னை மிரட்டுகின்றனர் இதனால் நான் மன உளைச்சலில் உள்ளேன் என அவர் மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில் அவர் அரசு தனக்கு வழங்கிய ஆதார் அடையாள அட்டை, பொது விநியோக அட்டை, வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தீயிட்டு எரிக்க முற்பட்டார். அப்போது அவரோடு கை குழந்தையோடு வந்த அவரது மனைவி அவரது செயலை கண்டித்தார். அவரின் இச்செயலால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் சிப்காட் காவல் நிலையத்தார் அவரை விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.