வழிபறி செய்த நபரை விரடிப் பிடித்த போலீசார்...

குன்னூர் பெள்ளட்டிமட்டம் பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்ட நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.

வழிபறி செய்த நபரை விரடிப் பிடித்த போலீசார்...

நீலகிரி | குன்னூர் அருகேயுள்ள அளக்கரை கிராமத்தை சேர்ந்தவர் அலி உசேன். இவர் நேற்று மாலை தனது வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பெள்ளட்டிமட்டம் அருகே சென்று கொண்டிருக்கும் போது அவரை வழிமறித்த இரு மர்மநபர்கள் அலி உசேனை மிரட்டி தாக்கியுள்ளனர்.

பின்னர் அவரிடம் இருந்த செல்போன் மற்றும் 1300 ரூபாய் பணத்தை வழிபறி செய்து விட்டு ஓடிவிட்டனர். இதனை தொடர்ந்து அலி உசேன், வெலிங்டன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

மேலும் படிக்க | இலங்கையிலிருந்து கடத்தி வரப்பட்ட தங்கம்....பின்னணி என்ன?!!!

இப்புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து வழிப்பறியில் ஈடுபட்ட முதல் குற்றவாளியான வசம்பள்ளம் பகுதியை சேர்ந்த 48 வயதுடைய ராஜா என்பவரை கைது செய்து, அவரிடம் இருந்து செல்போனை பறிமுதல் செய்தனர்.

தலைமறைவாக உள்ள 2-வது குற்ற வாளியான ஆனந்தகுமார் என்கிற கத்தி ஆனந்தை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

மேலும் படிக்க | வங்கி ஊழியர்கள் முகத்தில் ஸ்பிரே அடித்து கொள்ளை முயற்சி...வசமாக சிக்கிய திருடன்!