உதவித் தொகை கோரி அமைப்புசாரா தொழிலாளர்கள் போராட்டம்!

புதுச்சேரியில் அமைப்பு சாரா நல வாரியத்தில் ஆட்டோ ஓட்டுநர்கள், தையல் மற்றும் சமையல் கலைஞர்கள், வீட்டு வேலை செய்பவர்கள் உள்ளிட்ட 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.

உதவித் தொகை கோரி அமைப்புசாரா தொழிலாளர்கள் போராட்டம்!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகையை ரூ. ஆயிரத்தில் இருந்து ரூ.3,500 ஆக உயர்த்தி வழங்கக்கோரி 100க்கும் மேற்பட்ட அமைப்பு சாரா உறுப்பினர்கள் போலீசாரின் தடுப்புகளை மீறி சட்டமன்றத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அமைப்புசாரா தொழிலாளர்கள் 

புதுச்சேரியில் அமைப்பு சாரா நல வாரியத்தில் ஆட்டோ ஓட்டுநர்கள், தையல் மற்றும் சமையல் கலைஞர்கள், வீட்டு வேலை செய்பவர்கள் உள்ளிட்ட 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். மேலும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆண்டுதோறும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ரூ.1000 உதவித்தொகை வழங்கப்பட்டு வந்த நிலையில் ரூ.5 ஆயிரமாக உயர்த்தி வழங்கக்கோரி அரசுக்கு எதிராக  பல்வேறு போராட்டங்களில் அமைப்பு சாரா உறுப்பினர்கள் ஈடுபட்டு வந்தனர்.  

சட்டமன்ற முற்றுகை

இந்நிலையில் இன்றைய தினம் 100 க்கும் மேற்பட்ட அமைப்பு சாரா தொழிலாளர்கள் ஏஜடியூசி தொழிற்சங்கத்தினருடன் இணைந்து சம்பா கோவிலில் இருந்து சட்டமன்றம் நோக்கி ஊர்வலமாக வந்தனர். அப்போது சட்டமன்றம் அருகே இருந்த போலீசாரின் தடுப்புகளை மீறி சட்டமன்றதை முற்றுகையிட முயன்றனர். இதனால் போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது தொடர்ந்து சட்டமன்றம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த காவல் கண்காணிப்பாளர் வம்சி தி ரெட்டி சமாதானப்படுத்தி கலைய செய்தார் இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.புதுச்சேரியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கட்டிட தொழிலாளர்களுக்கு வழங்கியதை போல குறைந்தபட்சம் ரூ.3,500 ஜ அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டுமென மறியலில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை விடுத்தனர்.