பெண்ணின் அருள்வாக்கு நிஜமானது! கோவில் கற்சிலைகள் மீட்பு...

பெண்ணின் அருள்வாக்கு உண்மையானதில், கோவிலின் கற்சிலைகள் மீட்கப்பட்டுள்ளன. 9இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெண்ணின் அருள்வாக்கு நிஜமானது! கோவில் கற்சிலைகள் மீட்பு...
Published on
Updated on
2 min read

திருப்பூர் : பல்லடம் அருகே கேத்தனூர் பீரங்கி மேடு பகுதியில் கோவை மாவட்டம் சூலூர், இடையர் பாளையம், சரவணம்பட்டி பகுதிகளில் வசித்து வரும் ஒரு சமூகத்தவருக்கு சொந்தமான அருள்மிகு கருப்பராயன் அருள்மிகு கன்னிமார் கோவில் உள்ளது.

வருடம் தோறும் குறிப்பிட்ட சமூகத்தினர் வெளியூர்களிலிருந்து கேத்தனூர் பீரங்கி மேட்டிற்கு சென்று அங்குள்ள தங்களது குலதெய்வ கோவிலில் சிறப்பு பூஜை வழிபாடுகள் நேர்த்திக்கடன் செலுத்தி விட்டு திரும்புவது வழக்கம். இந்நிலையில் கடந்த அமாவாசை அன்று குலதெய்வ கோவிலில் திரண்ட அச்சமுக மக்கள் சிறப்பு பூஜைகள் வழிபாடுகளை நடத்தியுள்ளனர்.

அப்போது அங்குத் திரண்டு இருந்தவர்களில் சூலூரைச் சேர்ந்த கௌசல்யா என்ற பெண்ணிற்கு சாமி வந்ததாகவும் சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள விவசாய நிலத்தினுள் கருப்பராயன் கன்னிமார் கோவிலுக்கு சொந்தமான இரண்டு கற்சிலைகள் மண்ணில் புதைந்து கிடப்பதாக  அருள் வாக்கு கூறியதாகவும் தெரிய வருகிறது.

இதனை அடுத்து இன்று காலை பீரங்கி மேடு பகுதியைச் சேர்ந்தவர்களும் குலதெய்வ கோயிலுக்கு சொந்தக்காரர்களும் மாயமான கற்சிலைகளை பல இடங்களிலும் தேடி வந்தனர். இந்நிலையில் சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள விவசாயி நிலத்தில் சுமார் 5 அடி ஆழத்தில் புதையுண்டு கிடந்த சிவப்புத் துணியால் போர்த்தப்பட்டபடி இருந்த இரண்டு கற் சிலைகளையும் பொதுமக்கள் பூஜை செய்து பின்னர் தோண்டி எடுத்தனர்.

அதனைத் தொடர்ந்து தோண்டி எடுக்கப்பட்ட இரண்டு கற்சிலைகளையும் எடுத்து கோவிலுக்கு கொண்டு சென்று அங்கு சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகளிலும் ஈடுபட்டனர்.இது குறித்த தகவல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவியதையடுத்து பொதுமக்கள் அங்கு திரண்டனர். இதனிடையே தகவல் அறிந்து காமநாயக்கன்பாளையம் போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

தற்போது மண்ணில் புதையுண்டு இருந்த நிலையில் மீட்கப்பட்ட இரண்டு கற்சிலைகளும் சுமார் நூறு வருடங்களுக்கும் மேலானவை என கூறப்படும் நிலையில் இதுகுறித்து வருவாய்த்துறையினர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் கடந்த சில மணி நேரங்களாக பரபரப்பு நிலவி வருகிறது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com