காக்கைகளுடன் சிக்கிக் கொண்ட “ஆந்தை” மீட்பு...

சாலையோர மரத்தில் காக்கைகளுடன் சிக்கிக்கொண்ட ஆந்தையை, தீயணைப்புத் துறையினர் பத்திரமாக மீட்டுள்ளனர்.
காக்கைகளுடன் சிக்கிக் கொண்ட “ஆந்தை” மீட்பு...

சென்னை : ராஜா அண்ணாமலைபுரம் பகுதியில் இருக்கக்கூடிய மரத்தில் பல காக்கைகளுடன் ஆந்தை ஒன்று சிக்கிக் கொண்டுள்ளது.

இது தொடர்பாக அந்த வழியாக சென்ற பகுதி மக்கள் உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். 

இந்த தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த மயிலாப்பூர் தீயணைப்பு துறையினர் பல காக்கைகளுடன் சிக்கிக்கொண்ட ஆந்தையை பத்திரமாக மீட்டு உள்ளனர். 

மேலும் மீட்கப்பட்ட அந்த ஆந்தையை வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்க இருப்பதாக தகவல் தெரிவித்துள்ளனர்.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com