குடியிருப்பு பகுதியில் கொட்டப்பட்டுள்ள குப்பைகளால் நோய்தொற்று பரவும் அபாயம்...

குடியிருப்பு பகுதியில் கொட்டப்பட்டுள்ள குப்பைகளால் நோய்தொற்று பரவும் அபாயம்...

நீலகிரி | கேத்தி பேருராட்சிக்குப்பட்ட பிரகாசபுரம் பகுதியில் வீடற்றோருக்கான வீட்டு வசதி வாரியம் குடியிருப்பு உள்ளது. சுமார் 90 க்கும் மேற்ப்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலையில் இப்பகுதியில் பிளாஸ்டிக் கழிவுகள், குப்பைகள் கொட்டப்பட்டுள்ளது.

கேத்தி பேருராட்சி நிர்வாகம் குப்பைகளை அப்புறப்படுத்தாமல் மெத்தன போக்கு கட்டி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் கழிவு நீர் வழிந்தோடி வருவதால் அப்பகுதி மக்களுக்கு நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்ப்பட்டுள்ளது.

மேலும் அப்பகுதியில் கழிவு நீர் தொட்டியில் மூடி வைக்காமல் புதர் மண்டி உள்ளதால் கால்நடைகள் மற்றும் காட்டு பன்றி போன்ற வன விலங்குகள் விழுகும் நிலை ஏற்ப்பட்டுள்ளது. எனவே கேத்தி பேருராட்சி நிர்வாகம் உடனடியாக குப்பைகளை அகற்றவும், கழிவு நீர் தொட்டியை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com