சேலம் : ஆன்லைனில் லட்சக்கணக்கில் மோசடி செய்த கும்பல் ; சைபர் கிரைம் விசாரணை...

சேலம் : ஆன்லைனில் லட்சக்கணக்கில் மோசடி செய்த கும்பல் ; சைபர் கிரைம் விசாரணை...
Published on
Updated on
1 min read

சேலம் அருகே சர்க்கரை வியாபாரியிடம் 30 டன் சர்க்கரை அனுப்புவதாக கூறி ஆன்லைனில் 9.38 லட்சத்தை மோசடி செய்த கும்பல் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சேலம் மாவட்டம் :  ஓமலூர் அருகே உள்ள காமலாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மோகன்குமார். சர்க்கரை வியாபாரியான இவர் கடந்த ஆண்டு மகாராஷ்டிராவை சேர்ந்த தனியார் நிறுவனத்தில் சர்க்கரை வாங்குவதற்காக 25 டன் சர்க்கரைக்கு 7.79 லட்சத்தை அனுப்பியுள்ளார். ஆனால் அந்த நிறுவனம் 20 டன் சர்க்கரை மட்டுமே அனுப்பியது. மீதியுள்ள 5 டன் சர்க்கரையுடன் சேர்த்து மொத்தம் 30 டன் சர்க்கரையை அனுப்புவதாக கூறி 9.38 லட்சத்தை கேட்டுள்ளது.இதை நம்பிய மோகன்குமார் ஆன்லைனில் அந்த நிறுவனத்திற்கு 30 டன் சர்க்கரைக்கு 9.38 லட்சத்தை அனுப்பியுள்ளார். ஆனால் அந்த நிறுவனம் பணத்தைப் பெற்றுக் கொண்டு சர்க்கரையை அனுப்பாமல் மோசடி செய்தது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் சேலம் மாவட்ட சைபர் கிரைமில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com