குப்பை தொட்டியில் குழந்தையை மீட்ட தூய்மை பணியாளர்கள்....!!

குப்பை தொட்டியில் குழந்தையை மீட்ட தூய்மை பணியாளர்கள்....!!

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் பகுதிக்கு உட்பட்ட அதியமான் தெருவில் மறைமலைநகர் நகராட்சி ஊழியர்கள் சார்பில் தூய்மை பணி செய்து கொண்டிருந்தனர். அப்போது நீண்ட நேரமாக குழந்தையின் அழுகை குரல் கேட்டபடி இருந்துள்ளது.  இதனையடுத்து அழுகை குரல் கேட்ட திசையில் இருந்த வீட்டின் அருகே சென்று பார்த்தபோது மதில் சுவர் ஓரம் குப்பையில் உட்புறமாக பிறந்து சில மணி நேரங்களே ஆன ஆண் குழந்தை ஒன்று தொப்புள் கொடி ஈரம் கூட காயாமல் இருந்துள்ளது.

இதனைக் கண்ட துப்புரவு ஊழியர்கள் குழந்தையை பத்திரமாக
மீட்டு மறைமலைநகர் நகராட்சி ஆணையருக்கு தகவல் தெரிவித்ததோடு
மறைமலைநகர் காவல் நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர்.  சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மறைமலைநகரில் இயங்கி வரும் அரசு சுகாதார நிலையத்திற்கு அந்த குழந்தையை கொண்டு சென்றனர்.  அங்கு குழந்தைக்கு முதலுதவி அளிக்கப்பட்டு செங்கல்பட்டு தலைமை அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.  குப்பையில் குழந்தை கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com