தென்காசி : தொடர்மழை காரணமாக கடந்த சில நாட்கள் முன்பு வரை பல மாவட்டங்கள் வெள்ளக்காடாக காட்சியளித்தன. அதிலும், ஒரு சில இடங்களில் தண்ணீர் ஆங்காங்கே தேங்கிய படி காட்சியளிக்க, பொது மக்கள் தினசரி வாழ்க்கை சிரமம் நிரைந்ததாக பாதிக்கப்பட்டுள்ளது.
தென்காசியின் சங்கரன்கோவில் - கலப்பகுளம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட என் ஜி ஓ காலனி பகுதியில் துணை கண்காணிப்பாளர் அலுவலகம், நகர காவல் நிலையம், தாலுகா காவல் நிலையம், மகளிர் காவல் நிலையம் மற்றும் தீயணைப்பு துறை அலுவலகம் என மக்கள் அவசர நிலைக்கு பயன்படுத்தும் அனைத்து அலுவலகங்களும் ஒரே பகுதியில் அமைந்துள்ளது.
கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையின் காரணமாக இப்பகுதி முழுவதும் மழை நீர் தேங்கி கொண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது மழை நீருடன் சாக்கடை நீரும் கலந்திருப்பதால் பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசி காணப்படுகிறது. மேலும் அவ்வழியாக செல்லக்கூடிய வாகனங்கள் அனைத்தும் மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் செல்கிறது.
இது தொடர்பாக காவல்துறை, தீயணைப்பதுறையினரின் சார்பில் களப்பாகுளம் பஞ்சாயத்து அலுவலகத்தில் பலமுறை முறையிட்டும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை என்பது அரசு அதிகாரிகளின் குற்றசாட்டாக இருக்கிறது.
எனவே அவசர தேவைக்கு செல்லக்கூடிய தீயணைப்புத்துறை, காவல்துறையினரின் வாகனங்கள் செல்லவும், தொற்று நோய்கள் பரவாமல் தடுக்கவும், சாலையை சீரமைக்க வேண்டும் என்பது அப்பகுதியில் உள்ள அரசு அலுவலக ஊழியர்களின் கோரிக்கையாக இருக்கிறது.
மேலும் படிக்க | சுத்தமான காற்றுக்கு போராடும் கிராமம்... செவி சாய்க்குமா அரசு?