பள்ளி மாணவன் யோகாவில் உலக சாதனை!!! கிராம மக்கள் பாராட்டு... 

பள்ளி மாணவன் யோகாவில் உலக சாதனை!!! கிராம மக்கள் பாராட்டு... 

Published on

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பகுதியை சேர்ந்த பள்ளி மாணவன், சக்கராசனத்தில் நின்றபடி, ஒரு நிமிடத்தில், 78 முறை தண்டால் எடுத்து உலக சாதனை படுத்துள்ளார்.

திருவள்ளூர் : கும்மிடிப்பூண்டி பகுதியை சேர்ந்த புண்ணியக்கோடி - கிரிஜா தம்பதியர் மகன் டி.பி.ஷர்வின்குமார்(11) .இவர் கும்மிடிப்பூண்டியில் உள்ள தனியார் பள்ளியில், ஆறாம் வகுப்பு பயின்று வருகிறார். அதே பகுதியில் இயங்கி வரும் ஸ்ரீ சங்கரி யோகா பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில், யோகாசன பயிற்சி பெற்று வருகிறார். 

இவர் சக்கராசனத்தில் நின்றபடி, ஒரு கையை தரையில் வைத்து, ஒரு நிமிடத்தில், 78 முறை தலையால் தரையை தொட்டு, தண்டால் எடுத்து, உலக சாதனை படைத்துள்ளார்.இவரது சாதனை, "இன்டர்நேஷனல் புக் ஆப் ரெக்கார்ட்", "வேல்ட் வைட் புக் ஆப் ரெக்கார்ட்", "அசிஸ்ட் உலக சாதனை", ஆகிய மூன்று உலக சாதனை புத்தகங்களில் இடம் பிடித்துள்ளன .சாதனை படைத்த ஷர்வின்குமார், அவருக்கு யோகா பயிற்சி அளித்த சந்தியா ஆகியோருக்கு கிராம மக்கள் சார்பில் பாராட்டு குவிகிறது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com