
ராமநாதபுரம் | கடலாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் சுற்றுவட்டார பகுதியில் இருந்து 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் கடலாடியில் இருந்து கொம்பூதி செல்லும் சாலையில் ஒரே பைக்கில் பள்ளி சீருடைகளில் ஐந்து மாணவர்கள் ஆபத்தை உணராமல் பயணம் செய்து வருகின்றனர்
மேலும் பள்ளி மாணவர்கள் ஒரே பைக்கில் சென்று இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து விபத்து நேரிட்டால் உயிரிழப்புகள் ஏற்படும் என்பதை அறியாமல் பயணம் செய்யும் மாணவர்களுக்கு சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் அறிவுரைகளை வழங்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
மேலும் படிக்க | கொடைக்கானலில் நடந்த சிறுதானிய உணவு திருவிழா...