செஞ்சிக் கோட்டைக்கு ரோப் கார்...பேரூராட்சி தீர்மானம்!

செஞ்சிக் கோட்டைக்கு ரோப் கார்...பேரூராட்சி தீர்மானம்!

செஞ்சி கோட்டையில் 19 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ரோப் கார் அமைக்கவும்,படகு சவாரி செய்வதற்கும், பேட்டரி கார் நிருத்தம்,குடிநீர், தார் சாலை, பேவர் பிளாக் சாலையில் அமைக்க செஞ்சி பேரூராட்சி மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பேரூராட்சி மன்றத்தின் கூட்டம் பேரூராட்சி மன்ற தலைவர் மொக்தியார் மஸ்தான் தலைமையில் நடைபெற்றது.

வரலாற்று சிறப்பு வாய்ந்த செஞ்சி கோட்டையில் சுற்றுலா பயணிகளின் கோரிக்கையை ஏற்று செஞ்சி ராஜகிரி கோட்டையில் இருந்து கிருஷ்ணகிரி கோட்டைக்கு செல்ல ரோப் கார் வசதி ஏற்படுத்துவதற்கும்,படகு சவாரி அமைத்தல், பேட்டரி கார் நிறுத்துவதற்கும்,தார் சாலை, தெரு விளக்குகள் அமைத்தல், திசைகாட்டும் பலகைகள் மற்றும் குடிநீர் வசதிகள் என பல்வேறு திட்டங்களை செய்வதற்கு 19 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்வதற்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.