பெந்தேகோஸ்தே சபையில் நடந்த பரபரப்பு சம்பவம்...

பெந்தேகோஸ்தே சபையில் நடந்த பரபரப்பு சம்பவம்...

தேவ சபை போதகர் இரண்டு முறை இட மாறுதல் ஆகியும் மாறாமல் சபையை அபகரிக்கும் நோக்கில் செயல்படுவதாகவும் சட்ட விரோதமாக பொது குழு ஆள் சேர்ப்பு நடந்ததாக குற்றசாட்டு எழுந்துள்ளது.
Published on

கன்னியாகுமரி | மேல்புறம் பிளாக் ஆபிஸ் பின்புறம் இன்டியன் ஏலீம் தேவ சபை என்ற பெயரில் பெந்தேகோஸ்தே மதபோதக சபை செயல்பட்டு வருகிறது. இந்த சபையில் கேரளமாநிலம் செம்பூர் பகுதியே சேர்ந்த சத்தியதாஸ் என்ற மதபோதகர் 14 வருடங்களாக  மதபோதனைகள் செய்து வருகிறார்.

இந்நிலையில் புல்கோஸ்பல் இந்திய இன்டியன் ஏலீம் தேவ சபை நிர்வாக வழிமுறைகள் படி ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை இடமாற்றுதல் அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஆனாலும் அந்த மத போதகர் சத்தியதாஸ் சபையை அபகரிக்கும் நோக்கில் செயல்படுவதாக சபையின் ஒரு குழுவினர் எதிர்ப்பு தெரிவித்து இன்று சபை போதனை பொது குழு கூட்டத்தில் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இவர்கள் இன்று பொது குழு கூட்ட கூடாது என இது சம்பந்தமாக காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர் இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com