3-வது நாளாக உதகையில் கொட்டி வரும் கடும் உறைப்பனி...

3-வது நாளாக உதகையில் கொட்டி வரும் கடும் உறைப்பனி...

நீலகிரி மாவட்டம், உதகையில் 3வது நாளாக தொடர்ந்து உறைப்பனி கொட்டி வருகிறது.
Published on

நீலகிரி | உதகையில் ஆண்டுதோறும் நவம்பர் மாதம் முதல் பிப்ரவரி வரை பனிக்காலம் நிலவும். ஆரம்பத்தில் நீர்ப்பனி பொழிவு அதிகமாக இருக்கும். இதன் தொடர்ச்சியாக உறைபனி தாக்கம் தொடங்கும்.

குறிப்பாக உதகை, குன்னூர், கோத்தகிரி, மஞ்சூர் சுற்று வட்டார பகுதிகளில் கடும் உறைபனி பொழிவு ஏற்படும். ஆனால், கடந்த ஆண்டு பருவமழை தாமதமாக தொடங்கியதால் பனிக்காலமும் தாமதமாக தொடங்கியது.

உதகை அருகே உள்ள காந்தல் கால்பந்து மைதானத்தில் உறைபனி கொட்டி கிடந்தது. மேலும் கடும் குளிர் காரணமாக பொது மக்கள் அவதி அடைந்து வருகின்றனர். காலை முதல் மாலை வரை நன்றாக வெயிலும், மாலை முதல் அதிகாலை வரை கடுங்குளிரும் நிலவி வருகிறது. 

இந்நிலையில் உதகை பகுதியில் நேற்று முன்தினம் குறைந்தபட்சமாக 2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும், நேற்று 5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் பதிவான நிலையில் இன்று 4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com