கொடைக்கானலில் நடந்த சிறுதானிய உணவு திருவிழா...

கொடைக்கானலில் நடந்த சிறுதானிய உணவு திருவிழா...

சர்வதேச சிறுதானிய ஆண்டான 2023 முன்னிட்டு கொடைக்கானல் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில் சிறுதானிய உணவு திருவிழா நடைபெற்றது.

சர்வதேச சிறுதானிய ஆண்டாக 2023 ஆம் ஆண்டு கொண்டாடப்படுகிறது. இதில் பல இடங்களில் சிறுதானியங்கள் குறித்து விழிப்பு ணர்வு நடைபெற்று வரக்கூடிய நிலையில், கொடைக்கானலில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவிகள் சார்பில் சிறுதானிய உணவு திருவிழா நடைபெற்றது.

இது கலந்து கொண்ட மாணவிகள் சிறுதானியங்களான கம்பு, கேழ்வரகு குதிரைவாலி  உள்ளிட்ட பொருட்களை வைத்து பாரம்பரிய உணவுகளை தயாரித்திருந்தனர்.

மேலும் ஒரு சில மாணவிகள் சிறுதானியங்களை வைத்து அரபு நாடு உணவுகளையும், வெளிநாட்டு உணவுகளையும் சிறு தானியங்களை வைத்து செய்து அசத்தினர். இந்த உணவுத் திருவிழாவில் 500க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர்.

அருகில் இருக்கக்கூடிய பள்ளிகளில் இருந்து ஏராளமான மாணவர்கள் இந்த உணவுத் திருவிழாவில் பங்கேற்று சிறுதானியங்கள் குறித்து விழிப்புணர்வு சிறுதானியங்களில் உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் கலந்துரையாடினர்.

logo
Malaimurasu Seithigal Tv
www.malaimurasu.com