ஸ்டேட்டஸ் வைத்தால் ஸ்மார்ட் போன்...!!!

ஸ்டேட்டஸ் வைத்தால் ஸ்மார்ட் போன்...!!!

சுப்ரீம் மொபைல்ஸ் ‘வாட்ஸ் அப்’ ஸ்டேட்டஸ் வைத்து குறைந்த விலையில் ஸ்மார்ட் வாட்ச் வாங்க வாடிக்கையாளர்கள் கூட்டம் திரண்டது.

திருப்பூர் சுப்ரீம் மொபைல்ஸ் நிறுவனத்தாரின் சம்மர் சேல்ஸ் ஆஃபர் விளம்பரத்தை இன்று ஒருநாள் மட்டும் வாட்ஸ் அப் ஸ்டேட்டசாக வைத்து, அதை 200 பேருக்கு மேல் பார்வையிட்டு, அதை சுப்ரீம் மொபைல்ஸ் நிறுவனத்திற்கு சென்று காண்பித்தால் 4000 ரூபாய் மதிப்புள்ள ஸ்மார்ட் வாட்ச் 1000 ரூபாய் செலுத்தி  பெற்று கொள்ளலாம் என சுப்ரீம் மொபைல்ஸ் நிறுவனம் அறிவித்தது. 

இந்நிலையில் இந்த அறிவிப்பானது வைரலானதை தொடர்ந்து, ஏராளமானோர் வாட்ஸ்அப் ல் ஸ்டேடசாக வைத்து ஸ்மார்ட் வாட்சினை வாங்க கடையில் ஏராளமான வாடிக்கையாளர்கள் திரண்டனர்.  இதனை தொடர்ந்து கடை ஊழியர்கள் வந்திருந்த அனைவருக்கும் வரிசையில் நின்று ஸ்மார்ட் வாட்ச்சை பெற்று செல்ல வழிவகை செய்தனர்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com