சனி பெயர்ச்சியை முன்னிட்டு இன்று சனி கோவிலில் சிறப்பு பூஜை...

வருகிற 29ம் தேதி சனிபெயர்ச்சி நடக்க இருக்கும் நிலையில், இன்று சனி கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
சனி பெயர்ச்சியை முன்னிட்டு இன்று சனி கோவிலில் சிறப்பு பூஜை...

தஞ்சாவூர் | கும்பகோணம் அருகே திருநறையூர் கிராமத்தில் பர்வத வர்த்தினி சமேத ராமநாத சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. திருக்கோயிலில் சனீஸ்வரன் பகவான் மந்தாதேவி ஜெஷ்ட்டா தேவி என இரு மனைவிகள் மாந்தி குளிகன் என இரு மகன்களுடன் காக்க வாகனம் கொடிமரம் பலி பீடங்களுடன் தனி சன்னதி கொண்டு மங்கள சனி பகவானாக அருள் பாலித்து வருகிறார்.

இவ்வாலயத்தில் உலக மக்கள் நலம் பெற வேண்டி தசரத சக்கரவர்த்தி வழிபாடு செய்துள்ளார். அதேபோல் ராமபிரானும் ஆலயத்தில் வழிபாடு செய்துள்ளதாக தல வரலாறு. பல்வேறு சிறப்புடைய இத்திருக்கோவில் வருகிற 29 ஆம் தேதி மதியம் ஒரு மணி ஆறு நிமிடங்களை அளவில் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு சனி பெயர்ச்சியானது நடைபெற உள்ளது.

இதனை ஒட்டி சிறப்பு ஹோமம் அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து 30 ஆம் தேதி மாலை சனீஸ்வர பகவான் திருக்கல்யாணம் வீதி உலாவும் நடைபெறுகிறது. இந்நிலையில், சனி பெயர்ச்சிக்கும் முதல் சனிக்கிழமையான இன்று மங்கள சனீஸ்வர பகவானுக்கு மகா அபிஷேகம் செய்யப்பட்டு தீபாரதனை கட்டப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com