"முதுகுதண்டு அறுவை சிகிச்சை" மீனாட்சி மருத்துவமனை சாதனை!

"முதுகுதண்டு அறுவை சிகிச்சை" மீனாட்சி மருத்துவமனை சாதனை!

சக்கர நாற்காலியிலேயே தனது வாழ்நாள் முடிந்துவிடும் என வாழ்ந்து வந்த 15 வயது சிறுவனுக்கு இலவசமாக முதுகுத்தண்டு அறுவை சிகிச்சை செய்து நடக்க வைத்து சாதனை புரிந்துள்ளனர் தஞ்சை மீனாட்சி மருத்துவமனை மருத்துவர்கள்.

தஞ்சையை சேர்ந்த 15 வயது சிறுவன் கை.கால் பலவீனம் அடைந்து, கால் தசைகளில் விறைப்புத்தன்மை பிரச்சனை காரணமாக நடக்க முடியாமல் சக்கர நாற்காலியில் செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டான். ஆரோக்கியமாக எல்லோரைப் போலவும்  ஓடி, ஆடி விளையாடி வந்த சிறுவன் அன்றாட அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய கூட பிறர் உதவியை நாடும் நிலைக்கு ஆளானான்.

தஞ்சை மீனாட்சி மருத்துவமனையில் சிகிச்சைக்காக காண்பிக்கப்பட்ட சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் மிகவும் அரியவகை நோயான கைபோஸ்கோலியோசிஸ் எனும் நோயால் சிறுவன் பாதிக்கப்பட்டிருப்பதை கண்டறிந்தனர். இந்நிலையில் இதற்காக அறுவை சிகிச்சை செய்யும் அளவிற்கு வசதியில்லாத மிகவும் ஏழ்மையான குடும்பம் என்பதால் இலவசமாக முதுகுதண்டு அறுவை சிகிச்சை செய்தனர்.

இதனால் 3 வாரங்களில் பிறரை போல சாதாரணமாக சிறுவன் நடக்க ஆரம்பித்துள்ளான். சக்கர நாற்காலியிலேயே வாழ்க்கை முடிந்துவிடும் என நினைத்த சிறுவனை மீட்டு நடக்க வைத்த மீனாட்சி மருத்துவமனை டாக்டர்களுக்கு சிறுவனும், அவரது உறவினர்களும் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்து கொண்டனர்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com