அடிப்படை வசதி கூட இல்லாத மாணவர் விடுதி ; அரசு கல்லூரி மாணவர்கள் தர்ணா...

அடிப்படை வசதி கூட இல்லாத மாணவர் விடுதி ; அரசு கல்லூரி மாணவர்கள் தர்ணா...

 நந்தனம் அரசு கல்லூரி மாணவர்களுக்கான மாணவர் விடுதியில் அடிப்படை வசதிகள் இல்லாததால் மாணவர்கள் திடீரென தர்ணாவில் ஈடுபட்டனர்.சுகாதாரமற்ற குடிநீர் மற்றும் உணவு சாப்பிடுவதால் பல நோய்களுக்கு ஆளாவதாக வேதனை தெரிவித்தனர்.

அடிப்படை வசதி இல்லாத மாணவர் விடுதி :

சென்னை : நந்தனம் அரசு ஆதி திராவிடர் மாணவர் விடுதியில் அடிப்படை வசதியில்லாததால் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.நந்தனம் அரசு கலைக் கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கான விடுதி சாமரீஸ் சாலையில் அமைந்துள்ளது. அங்கு 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கி பயின்று வருகின்றனர். பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கிராமங்களில் இருந்தும் வந்து தங்கி பயிலும் மாணவர்களுக்கு சுத்தமான சுகாதாரமான உணவுகள், குடிநீர் வழங்கப்படாமல் உள்ளது. உணவு தரமில்லாமல், புழு, பூச்சிக்கள் இருக்கும் சாப்பாட்டை வழங்குவதாகவும், குடிநீரில் புழுக்கல், அழுக்குகள் உள்ள நீரினை வழங்குவதாகவும் மாணவர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.இது போன்ற சுகாதார மற்ற உணவு, குடிநீரை பயன்படுத்துவதால் பலவிதமான நோய்களுக்கு மாணவர்கள் ஆளாகின்றனர். அதே போல, கழிப்பறை வசதிகளும் இல்லாமல், கழிப்பறையில் இருந்து வெளியேறும் நீர் பாதாள சாக்கடையில் கலக்காமல் வெளியிலேயே கசிந்தோடுகிறது.  

மாணவர்கள் தர்ணா : 

மழைக்காலங்களில் மழை நீர் விடுதிக்குள் புகுவதால், சமையற்கூடத்தில் உள்ள டேபில்களை போட்டு தூங்கும் நிலைக்கு உள்ளனர். விடுதிக்கு வெளியே உள்ள சாக்கடைகள் மூடப்படாமல், திறந்த நிலையில் துற்நாற்றத்தோடு இருந்து வருவதால், கொசு தொள்ளைகள் ஏற்பட்டு சளி, காய்ச்சல் போன்ற நோய்களும் வருகிறது.இது குறித்து விடுதி வார்டனிடம் புகார் அளித்த போது சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்திக்கொள்ளுங்கள் என கூறியுள்ளார்.இதனால் மாணவர்கள் திடீரென சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.உடனடியாக காவல்துறையினர் மாணவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி விடுதி வளாகத்திற்குள் அழைத்து வந்தனர். அதனை தொடர்ந்து மாணவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட காவல்துறையினர் இரண்டு நாட்களுக்குள் அடிப்படை வசதிகள் செய்து தர உறுதியளித்தனர். அதனை தொடர்ந்தே மாணவர்கள் கலைந்து சென்றனர்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com