மாசு இல்லாத தீபாவளியைக் கொண்டாடுவோம்...மாணவர்கள் பேரணி!

மாசு இல்லாத தீபாவளியைக் கொண்டாடுவோம்...மாணவர்கள் பேரணி!

தனியார் கல்வி  நிறுவனம்  சார்பில் மாசு மற்றும் அதிக சத்தம் இல்லா தீபாவளியை அனைவரும் கொண்டாட வேண்டும் என்பதை வலியுறுத்தி நடைபெற்ற விழிப்புணர்வு  பேரணியில் பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்

 மாசு மற்றும் அதிக சத்தம் இல்லா தீபாவளியை அனைவரும் கொண்டாட வேண்டும் என்பதை வலியுறுத்தி தனியார் கல்வி நிறுவனம் சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் 150 க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு மாசு இல்லாத, சத்தம் இல்லாத பசுமையான தீபாவளியை கொண்டாட வேண்டும் என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு கடற்கரை காந்தி சிலையில் இருந்து புறப்பட்டு புதுச்சேரியின் முக்கிய வீதிகள் வழியாக  ஊர்வலமாக சென்றனர்.