பாரிமுனையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து....

பாரிமுனையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து....

சென்னை பாரிமுனை கந்தகோட்டம் அருகே ஹார்டுவேர் கடையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

ஹார்டுவேர் கடையில் ஏற்பட்ட தீ விபத்தால் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமாகியுள்ளது.  சென்னை பூக்கடை கந்தகோட்டம் அருகே வெங்கடாசல முதலி தெருவில் இன்று அதிகாலை ஹார்டுவேர் கடை தீப்பிடித்து எரிவதாக தீயணைப்பு துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து வண்ணாரப்பேட்டை ராயபுரம், எஸ்பிளனேடு ஆகிய 3  தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து ஒரு மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த விபத்தில் மிதியடிகள், சோப் ஆயில் பேரல்கள், பிளாஸ்டிக் மற்றும் இரும்பு உபகரணங்கள் என பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்துள்ளன.

பூக்கடை போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது.

தீயணைப்புத் துறையினர் துரிதமாக செயல்பட்டதால், அருகில் இருந்த கடைகளுக்கு தீ பரவாமல் தடுக்கப்பட்டுள்ளது.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com