கடும் பனிபொழிவால் கருகிய தேயிலை செடிகள்...

குன்னூர்யில் கடும் உறைப்பனி பொழிவு நிலவுவதால் பல நூறு ஏக்கர் தேயிலை செடிகள் கருகி காணப்படுகிறது.
கடும் பனிபொழிவால் கருகிய தேயிலை செடிகள்...
Published on
Updated on
1 min read

நீலகிரி | குன்னூர் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடும் பனிப்பொழிவு உள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் நூற்றுக்கணக்கான ஏக்கர் தேயிலை செடிகள் உறைப்பனியல் கருகியதால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.

கடந்த ஒரு வார காலமாக இரவு நேரங்களில் உறைப்பணியின்தாக்கம் அதிகமாக உள்ளது. பகலில் வெப்பமும் இரவு முதல் காலை வரைஉறை பனியின் தாக்கம் அதிகமாக உள்ளதால் புறநகர்  பகுதிகளில் 0 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையும் காணப்படுவதால் குளிரின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது.

நீலகிரி மாவட்டம் குன்னூரியில் நவம்பர் மாதம் முதல் நீர் பனி துவங்கி படிப்படியாக பணியின் தாக்கம் அதிகரித்து உறைப்பனி பொழிவாக மாறும். தற்போது குன்னூரியில் நிலவும் உறைப்பனி பொலிவு பிப்ரவரி மாதம் இறுதி வரை  இருக்கும்தெரிகிறது.

குன்னூர் மற்றும் புறநகர் பகுதிகளான பாலடா, கரும்பாலம், சேலஸ் உள்ளிட்ட பகுதிகளில் உறைப்பனி பொழிவு அதிகரித்து காணப்படுவதால் தேயிலை விவசாயிகள் மற்றும் மலை காய்கறி விவசாயிகள்கவலை அடைந்து உள்ளனர். மேலும் குளிர் நிலவியதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com