அரசு பள்ளி ஆசிரியை செய்த காரியத்தால் ஏற்பட்ட அதிர்ச்சி...

அரசு நடுநிலைப்பள்ளியில் வைக்கப்பட்டிருந்த பழைய பாட புத்தகங்களை ரூ.2500க்கு எடை போட்டு விற்பனை செய்த தலைமை ஆசிரியர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

அரசு பள்ளி ஆசிரியை செய்த காரியத்தால் ஏற்பட்ட அதிர்ச்சி...

தேனி | ஆண்டிப்பட்டி தாலுகா, கடமலை-மயிலை ஒன்றியம் வருசநாடு அருகே காமராஜபுரம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. 100க்கும் மேற்பட்ட மாணவ&மாணவிகள் படிக்கும் இந்த பள்ளியின் தலைமையாசிரியராக ஈஸ்வரி என்பவர் பணியாற்றி வருகிறார்.

இந்த பள்ளியில் உள்ள ஒரு அறையில் கடந்த 4 ஆண்டுக்கான பாடப்புத்தங்கள் இருப்பு வைக்கப்பட்டு இருந்தது. சுமார் 250 கிலோ எடையுள்ள இந்த பழைய பாடப்புத்தங்களை மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளின் அனுமதி பெறாமல் தலைமையாசிரியர் ஈஸ்வரி ரூ.2500க்கு விற்பனை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதுதொடர்பாக பழைய பொருட்கள் வாங்குபவரிடம் பாடப்புத்தகங்களை தலைமை ஆசிரியர் விற்பனை செய்வது குறித்த வீடியோவும் அதிகாரிகளிடம் வழங்கப்பட்டது. இதுகுறித்து தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தினர்  மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் கலாவதிக்கு புகார் தெரிவித்தனர்.

மேலும் படிக்க | ”தாய்மொழி ஆங்கிலத்தை விட... ” சட்ட அமைச்சர் கிரண் ரிஜ்ஜூ!!!

இந்த புகாரின் பேரில் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் கலாவதி தலைமையாசிரியர் ஈஸ்வரியிடம் கடந்த சில நாட்களாக விசாரணை நடத்தினார். விசாரணையில் பாடப்புத்தகங்களை பழைய பேப்பர் வாங்குபவருக்கு விற்பனை செய்ததை ஒப்புக்கொண்டார்.

இதையடுத்து முறைகேடாக பள்ளிக்கு சொந்தமான பழைய பாடப்புத்தகங்களை அதிகாரிகள் அனுமதியின்றி விற்பனை செய்த தலைமையாசிரியர் ஈஸ்வரியை தற்காலிக பணிநீக்கம் செய்து மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் கலாவதி உத்தரவிட்டார்.

பள்ளியில் சேமித்து வைத்திருந்த பாடப்புத்தகங்களை பழைய பொருட்கள் வாங்குபவரிடம் தலைமை ஆசிரியரே ரூ.2500க்கு விற்பனை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் படிக்க | 183 ஆசிரியர்கள் பணிநீக்கம்...காரணம் என்ன?!!