பட்டை நாமம் அணிந்து கொண்டு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!

பட்டை நாமம் அணிந்து கொண்டு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!

மத்திய அரசு பிரதான் மந்திரி கிசான் திட்டத்தில் நிதியை குறைத்துள்ளதை கண்டித்து தஞ்சையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட சில விவசாயிகள் நெற்றியில் பட்டை நாமம் அணிந்து பங்கேற்று வெளிநடப்பு செய்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த ஆண்டு பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு சரிவர வழங்காததை கண்டித்தும், இந்த ஆண்டு குறுவை நெல் சாகுபடிக்கு பயிர் காப்பீடு செய்யாததை கண்டித்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

பிரதான் மந்திரி இசான் திட்டத்தில் மத்திய அரசு கடந்த ஆண்டு 19 ஆயிரம்  கோடி வழங்கிய நிலையில் தற்போது 16 ஆயிரம் கோடியாக குறைக்கப்பட்டுள்ளது. வருங்காலத்தில் இந்த திட்டம் கைவிடப்படும் என அச்சம் தெரிவித்து விவசாயிகள் நெற்றியில் பட்டை நாமம் அணிந்து இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com