மேலும் கடன்காரராக்கும் முயற்சியில் தனியார் கடைகள்... விவசாயிகளின் நிலை என்ன?

தேவையைத் தாண்டி உரம் வாங்கவும், மின்னூட்டு உரங்களை வாங்கவுஜ்ம் தனியார் கடைகள் வற்புறுத்துவதாக் அவிவசாயிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
மேலும் கடன்காரராக்கும் முயற்சியில் தனியார் கடைகள்... விவசாயிகளின் நிலை என்ன?

தஞ்சாவூர் | இந்த ஆண்டு 3.5 லட்சம் ஏக்கரில் சம்பா சாகுபடி பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பல்வேறு பகுதிகளில் நாற்று வளர்ந்து வரும் வேளையில், தொடர் மழை காரணமாக நாற்றுகள் பாதிக்கப்பட்டது. இதனால் பயிர்களுக்கு அடி உரமான யூரியா பொட்டாஸ் போன்ற உரங்கள் மழை நீரில் அடித்து செல்லப்பட்டது.

இந்நிலையில் மீண்டும் புதிதாக உரம் தெளிக்கும் பணிகளில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். இது குறித்து விவசாயிகள் கூறுகையில், தஞ்சை மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் தனியார் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியிலும் உரம் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

மேலும் தனியார் கடைகளில் உரம் மூட்டை ஒன்றுக்கு 50 ரூபாய் கூடுதலாக வைத்து 350 ரூபாய் விலைக்கு விற்பதாகவும், யூரியா உரத்திற்கு 450 ரூபாய் மதிப்புள்ள மின்னூட்டு உரத்தை வாங்க கட்டாயப்படுத்துவதாகவும் விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

10 ஏக்கர் நிலம் வைத்திருக்கும் விவசாயி 3000 ரூபாய்க்கு உரங்கள் வாங்கினால், 4,500 ரூபாய்க்கு தேவையற்ற உரங்களை வாங்க வேண்டிய நிலைக்கு விவசாயிகள் தள்ளப்படுவதாகவும் அவர்கள் புகார் கூறுகின்றனர். எனவே கூடுதல் விலைக்கு உரங்கள் விற்பதையும், கட்டாயப்படுத்தி மின்னூட்டு உரங்கள் விற்பதையும் தடுக்க அதிகாரிகள்  நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் உரம் தட்டுப்பாடை போக்கி விவசாயிகளுக்கு தட்டுப்பாடு இல்லாமல் உரங்கள் கிடைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். உரங்கள் தட்டுப்பாடு ஏற்பட்டால், இந்த ஆண்டு மகசூல் பாதிக்கப்படும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து வேளாண்மை துறை அதிகாரிகளிடம் தொலைபேசி வெயிலாக கேட்டபோது, தஞ்சை மாவட்டம் முழுவதும் தேவையான அளவிற்கு உரங்கள் கையிருப்பு உள்ளதாகவும், தற்போது 4,243 மெட்ரிக் டன் உரம் கையிருப்பு உள்ளதாகவும், 15 நாட்களுக்குள் ஒரு தடவை மாவட்டத்திற்கு உரங்கள் வந்து கொண்டு இருப்பதாகவும் தெரிவித்தனர்.

எந்த கடைகளிலும் மின்னூட்டு உரத்தை கட்டாயப்படுத்தி விற்கக் கூடாது என அறிவுறுத்தி உள்ளோம். அதனையும் மீறி விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com