அரசு கூர்நோக்கு இல்லத்தில் இருந்து தப்பியோடிய சிறுவர்கள்...

கடலூர் மாவட்டத்தில் அரசு கூர்நோக்கு இல்லத்திலிருந்து 6 சிறுவர்கள் தப்பி ஓடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அரசு கூர்நோக்கு இல்லத்தில் இருந்து தப்பியோடிய சிறுவர்கள்...

கடலூர் சாவடி பகுதியில் அரசின் கூர்நோக்கு இல்லம் செயல்பட்டு வருகிறது.  இதில் 18 வயதிற்கு கீழ் உள்ள சிறுவர்கள் குற்ற செயலில் ஈடுபட்டால் அவர்களை இந்த கூர்நோக்கு இல்லத்தில் அடைத்து வைத்திருப்பார்கள். இதில் ஆண் பெண் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட சிறுவர்கள் இருந்து வருகிறார்கள்.

இந்நிலையில் இன்று நள்ளிரவு திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு அடைத்து வைத்திருந்த ஆறு மாணவர்கள் இந்த இல்லத்தில் இருந்து சுவர் ஏறி குதித்து தப்பி ஓடி உள்ளனர். கடலூர் புதுநகர் போலீசார் வழக்குப்பதிவு பதிவு செய்து தப்பி ஓடிய சிறுவர்களை போலீசார் தேடி வந்த நிலையில் இரு சிறுவர்கள் சிக்கி உள்ளனர். மேலும் நான்கு பேரை போலீசால் தீவிரமாக தேடி வருகின்றது.

அரசு கூர்நோக்கு இல்லத்தில் இருந்து சிறுவர்கள் தப்பி ஓடிய சம்பவம் கடலூர் பகுதி பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது, இதேபோல் கடலூர் புதுப்பாளையம் பகுதியில் தனியார் மனநல காப்பகத்தில் இருந்தும் ஐந்து பேர் தப்பி ஓட்டம் அவர்களையும் போலிசார் தேடி வருவது குறிப்பிடத்தக்கது,

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com