திருப்பூர் கோட்டை மாரியம்மன் கோவிலில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு ரூபாய் நோட்டு அலங்காரத்தில் அருள்பாலித்த அம்மனை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு இன்று பல்வேறு கோயில்களில் அதிகாலை முதலே சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் திருப்பூர் தாராபுரம் ரோட்டில் பிரசித்தி பெற்ற கோவிலாக உள்ள கோட்டை மாரியம்மன் கோவிலில் அதிகாலை 4 மணி முதல் அபிஷேக அலங்கார பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து ரூபாய் நோட்டு அலங்காரத்தில் கோட்டை மாரியம்மன் அருள்பாலித்தார். பக்தர்கள் திரளாக வந்து சாமி தரிசனம் செய்தனர்.
இதையும் படிக்க : கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்...!