மழையால் இடிந்து விழுந்த வீடு...! பெரும் உயிர்சேதம் தவிர்ப்பு..!

மழையால் இடிந்து விழுந்த வீடு...! பெரும் உயிர்சேதம் தவிர்ப்பு..!

தஞ்சை கீழராஜ வீதியில் அழகர்சாமி என்பவருக்கு சொந்தமான வீடு உள்ளது. பழமையான இந்த வீடு பழுதடைந்து இருந்ததால் வீட்டில் யாரும் வசிக்கவில்லை. வீட்டின் கீழ் தளத்தில் முன்புறம் இரண்டு கடைகள் வாடகைக்கு விடப்பட்டு இருந்தன. தஞ்சையில் தொடர்ந்து மழை பெய்து வந்ததால் நேற்று நள்ளிரவு வீட்டின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. சாலைகளில் சுற்றி திரியும் ஆதரவற்றவர்கள் வழக்கமாக வீட்டின் முன்புறம் படுத்து உறங்குவார்கள். மழை பெய்ததால் யாரும் படுக்காததால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. 

வீடு இடிந்து விழுந்ததில் மின்சார வயர் அறுந்து சாலையில் விழுந்தது. அந்த நேரத்தில் யாரும் அப்பகுதி வழியாக செல்லாததால் மின்சார தாக்கி ஏற்பட கூடிய உயிர் இழப்பும் தவிர்க்கப்பட்டுள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தஞ்சை வட்டாட்சியர், வருவாய் அலுவலர்கள், தேசிய நெடுஞ்சாலை அதிகாரிகள் பார்வையிட்டனர். பராமரிப்பு இல்லாமல் விடப்பட்டு இருந்ததால் மழையால் சேதம் அடைந்து இடிந்து விழுந்ததாக தெரிவித்துள்ளனர். 

Related Stories

No stories found.
logo
Malaimurasu Seithigal Tv
www.malaimurasu.com