அடுத்தடுத்து 3 கடைகளில் கைவரிசை காட்டிய திருடன்...
அரியலூர் | செந்துறை சாலையில் சண்முகா ஹோமியோ க்ளினிக் மற்றும் சக்தி ஸ்டோர், லிட்டில் எண்டர்பிரைசஸ் என்ற கடைகள் ஒரே இடத்தில் இயங்கி வருகின்றன. இந்நிலையில் நேற்று இரவு கடையை பூட்டி விட்டு சென்றவர்கள் மீண்டும் இன்று காலை வந்து பார்த்த போது கடை திறந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைத்து உள்ளனர்.
பின்னர் அரியலூர் நகர காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கபட்டுள்ளது. இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு போலீசார் இச்சம்பவம் குறித்து விசாரணை செய்ததில் சண்முகா ஹோமியா க்ளினிக்கில் வைத்திருந்த 3 லட்சத்தி 50 ஆயிரம் ரொக்க பணம் திருடு போனது தெரியவந்தது.
மேலும் படிக்க | காதலர் தினம் கொண்டாட திருடனாக மாறிய கல்லூரி மாணவா்கள்...
மேலும் மளிகை கடை அருகே இருந்த சிசிடிவி கேமராவை உடைத்த திருடன், அதன் ஹார்ட்டிஸ்கை தண்ணீரில் போட்டு சென்றுள்ளான். இதனை அடுத்து ஹார்ட்டிஸ்கை கைப்பற்றிய போலீசார் அதனை காயவைத்து, அதில் பதிவாகி இருக்கும் காட்சிகளை ஆராய்ந்து வருகின்றனர்.
மேலும், மோப்ப நாய் வரவழைக்கபட்டு திருடனை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். அரியலூரின் முக்கிய கடை வீதியில் திருட்டு சம்பவம் நடந்தது, அனைவரிடத்திலும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.