கடித்த பாம்புடன் ஓடி வந்த இளைஞர்....! பீதியடைந்த டாக்டர்கள்...!

கடித்த பாம்புடன் ஓடி வந்த இளைஞர்....!   பீதியடைந்த டாக்டர்கள்...!

நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் அடுத்துள்ள கல்லூரி திருவாசல் பகுதியைச் சேர்ந்தவர் மகேந்திரன். கூலித் தொழிலாளியான இவர் 8-ம் தேதியன்று விட்டு வாசலில் நின்று கொண்டிருந்தபோது 3 அடி நீளமுள்ள சாரைப்பாம்பு ஒன்று மகேந்திரனின் காலில் கடித்தது. 

உடனே திடுக்கிட்டுப் போன மகேந்திரன் தன்னைக் கடித்த பாம்பையே கையால் தூக்கினார். அப்போது கையிலும் பாம்பு கடித்ததைத் தொடர்ந்து அதனை ஒரு கேரி பேக்கில் போட்டு கட்டினார்.

பின்னர் நாகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு ஓடோடி வந்தவர், தன்னை பாம்பு கடித்து விட்டது என கூறியதோடு, கடித்த பாம்பை அனைவர் முன்னிலையிலும் காட்டினார். 

இதைக் கண்டு அலறியடித்த மருத்துவர்களும் பிற நோயாளிகளும் ஓட்டம் பிடித்ததால் சில நிமிடங்கள் அங்கு பரபரப்பு நிலவியது. வெகுநேரமாக கேரி பேக்கிலேயே கிடந்ததால் மூச்சுத் திணறி இறந்ததைத் தொடர்ந்து செத்த பாம்பை அங்கிருந்தவர்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். 

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com