கள்ளச்சந்தையில் மது விற்பனை அமோகம்...

கள்ளச்சந்தையில் மது விற்பனை அமோகம்...

மிலாடிநபி அரசு விடுமுறை கள்ளச்சந்தையில் மது விற்பனை அமோகம் விலை அதிகம் என்பதால் மது பிரியர்கள் வேதனை வீடியோ வைரலாகி வருகிறது.

கோவை தொண்டாமுத்தூர் அடுத்த செலம்பனூர் பகுதியில் அமைந்துள்ள டாஸ்மார்க் கடை (2231) உள்ளது. மிலாடி நபி அரசு விடுமுறை தினமான இன்று இந்த கடையில் ஆறிய அமைந்துள்ள பாரில் சட்டத்துக்கு புறம்பாக மது விற்பனை அமோகமாக நடந்து வருகிறது.

இன்று காலை முதல் வழக்கம் கடை திறந்து வைப்பது இருந்தால், மதிப்பீர்கள் தங்கு தடையின்றி மது பாட்டில்கள் வாங்கி செல்வது போன்று விற்பனை படிஜோராக நடந்து வருகிறது. மது விற்பவர்கள் எந்த ஆரவாரம் இன்றி நாற்காலியில் அமர்ந்து விற்பனை வேட்டை நடத்தி வருகின்றனர்.

ரூபாய் 220 முதல் ஒரு பாட்டிலுக்கு என விலை நிர்ணயம் செய்து அதிக அளவில் விற்பனை செய்து வருகின்றனர். இங்க மட்டும் இன்றி தொண்டாமுத்தூர் சுற்றுவாட்டார பகுதியில் உள்ள பெரும்பாலான மது பார்களில் விற்பனை ஜொராக நடந்து வருகிறது.

இந்த சூழ்நிலையில் இந்த பகுதியில் கல்லூரி பள்ளிகள் என பல உள்ளன. கல்லூரியில் இன்று பட்டமளிப்பு விழா நடந்துவரும் நிலையில் குடித்துவிட்டு போதையில் தள்ளாடிபடியும் ரோட்டில் மது பிரியர்கள் படுத்து கிடப்பதும் பெற்றோர்கள் மாணவர்களிடையே முகம் சுளிக்கும் விதமாக உள்ளது.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com