தொடர்மழையால் வெறிச்சோடிக் காணப்பட்ட ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சி...

திருப்பத்துர்ரில் தொடர்மழை காரணமாக தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டித் தீர்த்தது. இதனால், ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சி வெறிச்சோடி காணப்பட்டது.
தொடர்மழையால் வெறிச்சோடிக் காணப்பட்ட ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சி...

திருப்பத்தூர் : திருப்பத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பெருமாப்பட்டு ஊராட்சியில் ஏலகிரி மலை தென்திசை  அடிவாரத்தில் அமைந்துள்ளது புகழ்வாய்ந்த ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சி உள்ளது. இங்கு பிரசித்தி பெற்ற முருகன் கோயிலும் உள்ளதால் தமிழகமெங்கும் உள்ள பல்வேறு சுற்றுலா பயணிகள் இங்கு வந்து வழிபட்டு நீர்வீழ்ச்சியில் குளித்துவிட்டு செல்வார்கள்.

இந்த நீர்வீழ்ச்சி திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள முக்கியத்துவம் வாய்ந்த சுற்றுலாத் தளமாகவும் விளங்குகிறது. கடந்த சில தினங்களாக  பெய்த மழையால்  ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

இத்தண்ணீர்  ஊத்தங்கரையில் உள்ள பாம்பாறு ஆற்றுக்கு செல்வதால் அருகே உள்ள கிராமங்களான பெருமாபட்டு, தாதவல்லி, செலந்தபள்ளி, உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கும் சென்றடைகிறது. தற்போது நீர் வரத்து தொடங்கி இருப்பதால் விவசாயிகள் மட்டுமின்றி பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

இந்த ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சிக்கு தமிழ்நாடு மட்டுமல்லாமல் அண்டை மாநிலமான கேரளா,பெங்களூர் மற்றும் பிற மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து குளித்து விட்டுச் செல்கின்றனர். ஆனால் இன்று சனி மற்றும் ஞாயிறு விடுமுறை என்பதால் தற்போது ஜெழுகம்பாறை நீர்வீழ்ச்சிக்கு சுற்றுலாப் பயணிகள் வரவு அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் வெறிச்சோடி காணப்பட்டது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com