கடந்த 50 ஆண்டு காலமாக என் மீது நம்பிக்கை வைத்து...!!

கடந்த 50 ஆண்டு காலமாக என் மீது நம்பிக்கை வைத்து...!!

50 ஆண்டுகளாக எனக்கு வாக்களித்து என்னை வெற்றி பெற வைத்து வருகிறீர்கள் அதற்காக என் வாழ்நாள் முழுவதும் நானும் என் குடும்பமும் உங்களுக்கு என்றென்றும் விசுவாசமாக இருப்போம்.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள ஆத்திப்பட்டி ஊராட்சியில் 15 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து கட்டப்பட்ட நியாய விலை கட்டிடத்தினை வருவாய் துறை அமைச்சர் திரு கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் திறந்து வைத்தார்.  அப்போது பேசிய அவர் தேர்தல் நேரத்தில் நான் அளித்த வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக உங்களுக்கு நிறைவேற்றித் தந்து வருகிறேன் எனவும் அனைத்து விரிவாக்கப் பகுதிகளுக்கும் சாலை குடிநீர் கழிவுநீர் வாய்க்கால் கட்டித் தர சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது எனவும் கூறினார்.

மேலும் கடந்த 50 ஆண்டு காலமாக என் மீது நம்பிக்கை வைத்து நீங்கள் எனக்கு வாக்களித்து வெற்றி பெற வைத்து வருகிறீர்கள் என்றும் அதற்கு என்றென்றும் நான் உங்களுக்கு விசுவாசமாக இருப்பேன் என்றும் கூறிய அவர் நான் மட்டுமல்ல என் குடும்பமே உங்களுக்கு எப்போதும் விசுவாசமாக இருக்கும் எனவும் தெரிவித்தார்.  இல்லத்தரசிகளுக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை விரைவில் வழங்கப்பட உள்ளது எனவும் அதற்கான அறிவிப்பு  வெளியாகி உங்களுக்கு அத்தொகையை விரைவாக வழங்க உள்ளார் முதலமைச்சர் மு க ஸ்டாலின் எனவும் கூறினார்.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com