தூத்துக்குடி : தேசிய ஒற்றுமை தினத்தில் ஒற்றுமை ஓட்டம்...!

தூத்துக்குடி : தேசிய ஒற்றுமை தினத்தில் ஒற்றுமை ஓட்டம்...!

Published on

இன்று, இந்திய நாட்டின் இரும்பு மனிதர் எனப் போற்றபடும் சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்த நாள். இந்த தினமானது தேச ஒற்றுமை தினமாக கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு மத்திய விளையாட்டு மேம்பாட்டு அமைச்சகத்தின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை சார்பில் நாட்டில் 75 ஆயிரம் இடங்களில் இன்று ஒற்றுமை ஓட்டம் நடைபெறுகிறது. அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டத்தில் 120 இடங்களில் ஒற்றுமை ஓட்டமானது நடைபெற்றது.

தூத்துக்குடியில் நேரு யுவகேந்திரா மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் நடத்தப்பட்ட ஒற்றுமை ஓட்டத்தை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கே.செந்தில்ராஜ் துவக்கி வைத்தார். மாவட்ட விளையாட்டு மைதானத்திலிருந்து துவங்கிய அந்த ஒற்றுமை ஓட்டம் பல பகுதிகளை சுற்றி மீண்டும் விளையாட்டு மைதானத்தை அடைந்தது. இதில் ஏராளாமான மாணவ, மாணவிகள், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் அந்தோனி அதிர்ஷ்டராஜ், நேரு யுவகேந்திரா, மாவட்ட அலுவலர் இசக்கி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com