சென்னை : திருவான்மியூரில் 1.80 லட்சம் மதிப்பிலான ஒரு தங்கம் மற்றும் ஒரு வைர மோதிரத்தை பெண்மணி தொலைத்தார். அந்த பெண்மணியுடன் சேர்ந்து தொலைத்த மோதிரங்களை தூய்மை பணியாளர்கள் தேடி கண்டுபிடித்து கொடுத்தனர்.
திருவான்மியூர் திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த பெண்மணி தன்னுடைய வைரம் மற்றும் தங்க மோதிரத்தை தொலைத்து தேடி வந்த நிலையில் அவருடன் இணைந்து மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் 1.80 லட்சம் மதிப்பிலான மோதிரங்களை கண்டறிந்து கொடுத்துள்ளனர்.
மோதிரத்தை தவறவிட்டவரின் பெயர் பிரியா என்றும், கண்டறிந்து கொடுத்த தூய்மை பணியாளர்களின் பெயர் மணிகண்டன் மற்றும் சக்திவேல் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.