மினி பஸ் மீது பெட்ரோல் குண்டு வீசிய இருவர் கைது!

விரைந்து வந்த உவரி போலீசார் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
மினி பஸ் மீது பெட்ரோல் குண்டு வீசிய இருவர் கைது!
Published on
Updated on
1 min read

நெல்லை மாவட்டம் திசையன்விளை உவரி அருகே உள்ள நவ்வலடியில் கடந்த அக்டோபர் 8 ஆம் தேதி இரவு தனியார் மினி பஸ் ஒன்று சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. நள்ளிரவு நேரத்தில் அங்கு வந்த மர்ம நபர்கள் சிலர் அந்த பஸ் மீது பெட்ரோல் வெடிகுண்டுகளை வீசி தீ வைத்தனர்.   தீ வேகமாக பரவத் துவங்கியதும் . அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து தீயை அணைத்தனர்.

இதனால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது. தகவல் அறிந்து அங்கு விரைந்து வந்த உவரி போலீசார் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.  மினி பஸ் மீது பெட்ரோல் குண்டு வீசிய மர்ம நபர்கள் யார்? என்று அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. காமிராக்களை ஆய்வு செய்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். 

இதில் ராக்கெட் ராஜா கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த சம்பவம் நடந்திருப்பது  போலீசாருக்கு தெரிய வந்தது. இதனை அடுத்து பெட்ரோல் குண்டு வீசிய  வழக்கில் திசையன்விளை அருகே அப்புவிளையைச் சேர்ந்த சூர்யா மற்றும் அவரது நண்பர் லிங்கேஸ்வரன் என்பவரையும் கைது செய்தனர். மேலும் இது சம்பந்தமாக சிலரை தேடி வருவதாகவும் போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com