இரண்டு சவரன் நகை கொள்ளை..! மர்ம நபர்களுக்கு வலைவீச்சு...!

இரண்டு சவரன் நகை கொள்ளை..! மர்ம நபர்களுக்கு வலைவீச்சு...!

Published on

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே ராமநத்தத்தில் வசித்து வருபவர் கிருஷ்ணராஜ். இவர் தனது மகனுடன் இன்று வெளியூர் சென்றுள்ளார். இவரது மனைவி யோகநாயகி பெரம்பலூர் மாவட்டத்தில் ஆசிரியராக பணியாற்றுவதால் அவரும் பள்ளிக்கு சென்றுள்ளார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாததை அறிந்த மர்ம நபர் வீட்டின் கதவை இரும்பு கம்பியால் லாவகமாக உடைத்து உள்ளே நுழைந்து பீரோவில் இருந்த இரண்டு லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் ரொக்கம் மற்றும் இரண்டு சவரன் நகைகளை திருடி சென்றுள்ளார்.

வீடு திறந்து இருப்பதை பார்த்த எதிர் வீட்டில் வசிப்பவர், கிருஷ்ணராஜை  செல்போனில் தொடர்பு கொண்டு தகவல் கூறியுள்ளார். இதனை அடுத்து கிருஷ்ணராஜ் மற்றும் அவரது மனைவி யோகநாயகி வீட்டில் வந்து பார்த்த போது நகை மற்றும் பணம் திருடப்பட்டு இருப்பது தெரியவந்தது. புகாரின் பேரில் ராமநத்தம் போலீசார் வீட்டில் வைத்திருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை செய்து வருகின்றனர்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com