மக்கள் வருகையின்றி வெறிச்சோடி காணப்படும் வண்டலூர் உயிரியல் பூங்கா....!

மக்கள் வருகையின்றி வெறிச்சோடி காணப்படும் வண்டலூர் உயிரியல் பூங்கா....!
Published on
Updated on
1 min read

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக தொடர் மழை பெய்து வருகிறது. அதனால் பல இடங்களும் மழை நீரால் சூழ்ந்துள்ளது. மக்கள் வெளியே செல்ல முடியாத நிலை உள்ளது. இந்நிலையில் தொடர் மழை காரணமாக வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா வெறிச்சோடி காணப்படுகிறது. 

வார விடுமுறை நாட்கள் என்றாலே வண்டலூர் உயிரியல் பூங்காவில் பார்வையாளர்கள் அதிகமாக வருகை புரிவது வழக்கம். தற்பொழுது தொடர் மழையின் காரணமாக பார்வையாளர்கள் இன்றி வண்டலூர் உயிரியல் பூங்கா வெறிச்சோடி காணப்படுகிறது. வண்டலூர் பூங்காவில் சுமார் 180 வகையான 2000க்கும் மேற்பட்ட வனவிலங்குகள் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து ஒரு வாரமாக பெய்து பெய்து வருகிறது கடந்த சில நாட்களாக பள்ளி மற்றும் கல்லூரிகள் கூட விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதாலும் வார விடுமுறை தினம் என்பதாலும் பூங்காவில் அதிக அளவில் பார்வையாளர்கள் வருகை புரிவார்கள் ஆனால் தொடர் மழையின் காரணமாக வண்டலூர் உயிரியல் பூங்கா பார்வையாளர்கள் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com